புதன், 21 டிசம்பர், 2011

கவனிப்பார் இல்லியோ......................

தஞ்சை மாவட்டத்தில், தஞ்சை, பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுவாசத்திரம், அம்மாபேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய விவசாய வட்டங்கள் உள்ளன.இவற்றில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் எக்டேர் பரப்பளவில், தற்போது விவசாயம் நடக்கிறது. விவசாயத்திற்குப் பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளில், நிலத்தடி நீர் மட்டம் 42 அடி குறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டே ஆண்டுகளில், தரிசு நிலங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த அபாயப் புள்ளி விவரங்கள், தஞ்சை மாவட்ட விவசாயத்தில் ஏற்பட்டு வரும் விரும்பத்தகாத மாற்றங்களின் சில அறிகுறிகள் தான் இவை.

தண்ணீர் கரை புரண்டோடும் காவிரி நதி நீர் கால்வாய்கள், அவற்றில் குளித்துக் கும்மாளம் போடும் பிள்ளைகள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் எனக் காட்சி தரும் வயல்வெளிகள், வயல்வெளிச் சேற்றில் நாற்று நடும் பெண்கள் என, நெஞ்சை அள்ளும் தஞ்சை கிராமங்கள், இன்னும் ஐந்து ஆண்டுகளில், இந்த காட்சிகள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அதில், நிலத்தடி நீர் மட்டம், சராசரியாக 13.87 மீட்டர், அதாவது 45.5 அடி அளவிற்குக் குறைந்துள்ளது தெரியவந்தது. ஒரு காலத்தில் சோழ நாட்டு நதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடும், கண்ணுக்கெட்டிய தூரம் வயலும், கழனிகளில் பச்சை பசேலென புல்லும் நெல்லும் காணக் கண் கோடி வேண்டும்... திரு. கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் தஞ்சாவூர் பற்றி ரொம்ப அழகா வர்ணித்து இருப்பார் ... ஒரு காலத்தில் இப்படி இருந்த தஞ்சை இப்போது எங்கு பார்த்தாலும் தரிசு நிலமும், ரியல் எஸ்டேட் வீடு மனையும் பார்க்கும் போது மனசு வலிக்குது... நிலத்தடி நீரும் இல்லை .. மேட்டூர் தண்ணியும் போதுமான அளவு வருவது இல்லை ... மனுஷன் எல்லா மரங்களையும் வெட்டி தள்ளுகிறான், அதனால் மழையும் குறைந்து விட்டது... நமக்கு நாமே மெல்ல மெல்ல விவசாயத்தையும் சேர்த்து இயற்கை வளங்களையும் கொலை செய்ததின் விளைவாய் இனி வரும் காலங்களில் நாம் வசிக்கும் பகுதி பாலைவனமாக மாறினாலும் ஆச்சிரிய படுவதற்கு இல்லை.
செத்துக்கொண்டிருக்கும் விவசாயத்தை அரசாங்கம் காப்பாற்ற முன் வரவேண்டும். இல்லா விட்டால், இன்னும் 10 வருஷத்துல நமக்கு சாப்பாடு பிரட் ம் ஜாம் ம் தான்.

செவ்வாய், 1 நவம்பர், 2011

காவேரி கரையில் இருந்து ..............

நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் குடந்தை மண்ணில் இருந்து இந்த புதிய அரசு உங்களை என்னுடன் அறிமுக படுத்தி கொள்கிறேன். என் சார்ந்த கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆவலாக இருக்கிறேன். அதை உங்கள் மனம் உவந்து வரவேற்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன். தமிழுடன் விளையாட எனக்கு இந்த கணினியுகம் கொடுத்த மிக பெரிய வரம் இது. யாருக்கும் அஞ்சாமல், துணிவுடன், நேர்மையுடன் வலம் வர விரும்புகிறேன். செந்தமிழை செம்பொன் சிம்மாசனத்தில் அமர்த்த எனக்கு கிடைத்து இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி தமிழை வாழ்க! வளர்க! என்று என்றும் வாழ்த்துவேன்.